மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
133
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் குழந்தைகள் மூலம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறி மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். குடும்ப உறவு அற்புதமாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவியுடைய குழந்தைகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை அமையும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!