பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

0
117

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி! 

புகழ்பெற்ற பழனி மலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ஆன்லைனில் கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாகவும் திருஆவினன்குடி என்கிற பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என்பது வழக்கம். இதன்படி பழனி கோவிலுக்கு 2018ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆண்டு நடைபெறவில்லை.

இதையடுத்து இந்த ஆண்டு பழனி கோயிலின் குடமுழுக்கு விழா நடத்த கோவிலின் அறங்காவலர்கள் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்ததை ஒட்டி வருகின்ற ஜனவரி 27ஆம் நாள் குடமுழுக்கு விழா நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் 3000 பக்தர்களுக்கு மட்டுமே குடமுழுக்கு விழாவில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.