மேஷம் – இன்றைய ராசிபலன்! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மேஷம் – இன்றைய ராசிபலன்! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் ஒரு சுபிட்சமான பாதையுடன் செல்லும். கணவன் மனைவி சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருகை புரிவார்கள்.

 

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை மறையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..