மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பரபரப்பு நிறைந்த நாள்!

Photo of author

By Rupa

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பரபரப்பு நிறைந்த நாள்!

Rupa

Aries – Today's Horoscope!! Busy day!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பரபரப்பு நிறைந்த நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பரபரப்பு நிறைந்த நாள். இன்று அதிகாலையில் சில பொறுப்புகள் வந்து சேர்வதால் பரபரப்புடன் காணப்படுவீர். வேலை சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்பதால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். நிதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை அமையும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் ஆற்றலுடன் அமையும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் சிறப்பாக நடப்பதால் மனதில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் கண்டிப்பாக வந்து சேரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறைவு சேர்ந்த
அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த பாரங்கள் குறையும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்