மேஷம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! கலகலப்பு மிகுந்த நாள் !

மேஷம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! கலகலப்பு மிகுந்த நாள் !

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு மிகுந்த நாளாக உள்ளது. ஏனென்றால் கலஸ்திர ஸ்தானத்தில் சந்திரன் உள்ளதால் மிகுந்த கலகலப்புடன் காணப்படுவீர்.

நிதி நீங்கள் எதிர்பார்த்த அளவு வந்து சேரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த நீண்ட நாள் கோரிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாகவும் அருமையாகவும் நடைபெறும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலமாக மாறுவார்கள்.

கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் வந்து சேரலாம் ‌. மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல ஆரோக்கியம் சீராக்கி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்

Leave a Comment