மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!

0
183
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இதனால் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உடன்பிறப்புகள் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்க எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை அருமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவருவதோடு மட்டுமல்லாமல் சில சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சென்றவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்

Previous articleஎச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகம் நிறைந்திருக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here