ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகம் நிறைந்திருக்கும் நாள்!

0
182
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகம் நிறைந்திருக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் நிறைந்திருக்கும் நாள். தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மனதில் ஒரு சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியன் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வருவதற்கு இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் மனதில் சிந்திக்கும் செயலை அப்படியே செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here