மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! நல்லவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள்!
மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நல்லவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை இன்று மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும்.
பொருளாதாரம் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் கொடி கட்டி பறக்கும்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியான யோசனையோடு செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்புகள் வந்து சேரும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலையில் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு உதவிகள் இன்று அதிகமாக கிடைக்கப்பெறுவீர்கள்.
இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.