மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு நிறைந்த நாள்!

0
199
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு நிறைந்த நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு நிறைந்த நாள். மாலை சந்திராஷ்டமம் வருவதால் உஷாராக இருப்பது நல்லது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் காலையில் செய்து முடிப்பது நன்று. நிதி திருப்திகரமாக உள்ளது.

கணவன் மனைவியிடையே ஒற்றுமை அற்புதமாக உள்ளது. பொருளாதாரம் அற்புதமாக உள்ளது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் சுபிட்சமான பாதையை காண்பார்கள். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காலையில் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

Previous articleகுழந்தைகளுக்கு நெஞ்சு சளி மார்பு சளி குணமாக இதை ஒருவேளை கொடுத்தால் போதும்!!
Next articleஇந்த இரண்டு பொருள் போதும் முடக்குவாதத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம்!