மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

0
179
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். ராசியில் சந்திர பகவான் மற்றும் ராகுவும் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

குடும்ப உறவுகளின் சிறு சிறு பிரச்சனைகள் எழலாம் என்பதால் அதனால் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை குறைவதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் சில மன குழப்பங்கள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் பழி நேரிடலாம் என்பதால் எடுக்கும் கோப்புகளை பத்திரமாக பாதுகாப்பது நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வர வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டும் மற்றும் கவனத்துடன் செயல்பட வேண்டும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleபாபா படத்தின் டிரைலர் வெளியானது…
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here