மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பூர்விக சொத்து கிடைக்கும் நாள்!

0
188
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பூர்விக சொத்து கிடைக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பூர்விக சொத்து கிடைக்கும் நாள். பூர்வீக சொத்து உங்களுக்கு வர காலதாமதம் ஆகி உள்ளது. தற்போது கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வு நடைபெற உள்ளதால் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் சந்தோஷம் வந்து சேரும்.

பொருளாதார முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பலூன் குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் மறையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் தைரியமாக செயல்படுவார்கள்.

கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுத்த காரியம் இனிமையாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும்.

மருத்துவ செலவுகள் குறையலாம். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் மனதில் ஒரு சிறு குழப்பத்தோடு இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇது ஒரு கைப்பிடி போதும் எதிரிகளை ஓட ஓட விரட்டி விடலாம்! ஆன்மீக உண்மை!
Next articleஅத்திப் பழத்தைத் எந்த நேரத்தில் எப்படி உண்ண வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here