மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

0
193

மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். எனக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்.அயன‌ சயன ஸ்தானமாகிய விரய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் இன்றைக்கும் பொழுது போக்கு அம்சங்களில் நாட்டம் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் ஒருபுறம் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சியினால் பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் இருக்கும் நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாளாக இன்றைய தினம் இருக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதிரையுலகில் வசூல் வேட்டை நடத்திய பதான்! ஒரே நாளில் இவ்வளவா! 
Next articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் நினைத்த காரியங்களை நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here