ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் நினைத்த காரியங்களை நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

0
83

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் நினைத்த காரியங்களை நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் நினைத்த காரியங்களை நினைத்தபடியே நிறைவேறும் நாள். ஆபஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். குடும்ப உறவு பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவி இன்றைய நாள் அதிக புரிதல் உடன் காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாகவும் லாபகரமாகவும் நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் நினைத்ததை செய்து காட்டுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபயல்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இனிய காரியங்கள் எண்ணியபடியே நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani