மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகள் அமையும் நாள்!!

Photo of author

By Selvarani

மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகள் அமையும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் மிக மிக சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படுவதால் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் அருமையாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். விற்பனை லாபகரமாகவும் அமோகமாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியல்வாதிகள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோசமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு மனமகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் ஆகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.