மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
195

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப உறவு சுபிட்சமாக செல்லும். கணவன் மனைவி இடையே அதில் அற்புதமான அன்யூனியம் உருவாகும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சில நன்மைகளை நீங்கள் இன்றையதினம் எதிர்பார்க்கலாம்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக நீங்கள் கேட்டீர்கள் வங்கிக் கடனுதவி வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதன முயற்சிகளில் ஈடுபடுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் ஒருவித மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முக்கியமான மாணவர்களாக மாறுவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மையை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleநடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம்? அவருடைய தாயார் சொன்ன பதில்!
Next articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here