ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
195

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். சந்திர பகவான் ரோகினி நட்சத்திரத்தில் இருப்பதால் ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப உறவு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் ஒரு அளவிற்கு வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் வியாபார தொடர்பாக சில மனக்கிலேசங்கள் வந்து போகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் வீண் அலைச்சல்களை சந்திப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வதற்கு சில உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக படிக்க வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here