மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தட்டுப்பாடுகள் அகலும் நாள்!!

0
166
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தட்டுப்பாடுகள் அகலும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தட்டுப்பாடுகள் அகலும் நாள். தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை சீராக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வங்கிகளிடம் கேட்டிருந்த உதவிகள் கண்டிப்பாக வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் சந்தோஷம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான பலன்களை பெறுவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani