மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

0
260
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று விலகும். உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் அருமையாக அமையும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அருமையாக செயல்படுவார்கள். சிலருக்கு எடுக்கும் காரியங்கள் அருமையாக வெற்றி பெறும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உயர்வதோடு மட்டுமல்லாமல் சொத்து சேர்க்கை உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleடிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!
Next articleசுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!