டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

0
181
#image_title

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு போன்ற துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பதாரர்கள் டிஎன்பிசி யின் அதிகாரவபூர்வமான இணையதளமான www. tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் நாளையுடன் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் ஒன்பதாம் தேதி நள்ளிரவு இரவு 12 மணி முதல் மார்ச் 11ஆம் தேதி இரவு 11:59 வரை விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வானது கோவை மதுரை திருச்சி காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

author avatar
Parthipan K