மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள்!!

0
225

மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள்!!

மேஷ ராசிய அவர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். எடுக்கும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடித்து எல்லோரையும் மகிழ வைப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் ஓயும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் வழியில் நிம்மதியான ஒரு தகவல் வந்து சேரும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து தொழில் மற்றும் வியாபாரம் மேன்மையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.

மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு அதிகரிக்கும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் இடங்கள் சாதகமாக முடிவடையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் அனேகமாக ஓய்வெடுப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்த ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here