ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள்!!

0
219

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைய தினம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அருமையாக நிறைவேறும். தடைபட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறுவதால் மனது சந்தோஷமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வருவார்கள்.

உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் விலகும் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக செல்லும் உடல் ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.

மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் வந்து சேரும். கலை துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகச் செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். இல்லத்தரசிகளுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள்!!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here