மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

0
75
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் மனக்குழப்பமும் கஷ்டமும் வரும் ஆகையால் யோசித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே சற்று அபிப்பிராய வேதங்கள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பது அரிதாக இருக்கும். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பகைவர்களாக மாறலாம். கொடுக்கல் வாங்கல் சிரமமாக இருக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மனதில் ஒருவித சோர்வு அசதி வந்து நீங்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.