மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் உண்டாகும் நாள்!!

0
187

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் உண்டாகும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் உண்டாகும் நாள். குடும்ப உறவு சிறப்பாக இருந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை.

வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக கருதப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோசனை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் முதல் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் அருமையான சூழ்நிலை காண்பார்கள். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிஜய் நடித்த வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ வெளியீடு! 
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!