மேஷம் ராசி- இன்றைய ராசிபலன்!!அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
196
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி- இன்றைய ராசிபலன்!!அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திர பகவான் ராகு உடன் சேர்ந்து உள்ளதால் மனதில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நிதி வருவதற்கு தாமதமாகும்.

கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் எழலாம் என்பதால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக உள்ளது என்றாலும் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மனக்குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு உடலில் சோர்வு மற்றும் அசதி வந்து சேரும். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous article1ஸ்பூன் போதும்! எலும்பு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு!
Next articleவாத நோயா? இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து இப்படி குடியுங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here