இடுக்கியில் மீண்டும் காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம்
இடுக்கியில் மீண்டும் அரிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம், குடியிருப்புக்குள் புகுந்து சமையலறையை தகர்த்தால் அச்சம்.
கேரளா மாநிலம் இடுக்கி சின்னக்கானல் பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டுயானை அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் கடை, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
மேலும் அப்பகுதியில் இதுவரை 11 பேரை தாக்கி கொன்றுள்லது.இதனால் இந்த அரிக்கொம்பனை பிடிக்க வனத்துறை முடிவு செய்த நிலையில் கேரளா உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.
5 பேர் கொண்ட குழுவை நியமித்து ஆய்வறிக்கை கேட்டது.இந்நிலையில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து ரேடியோ காலர் ஐடி பொருத்தி பாலக்கட்டிலுள்ள் பரம்பிக்குளம் உள் வனப்பகுதியில் விடலாம் என அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தது.
இந்த அறிக்கையை அமல்படுத்த கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான வனத்துரை தயாராகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் 301 காலனியில் உள்ள ஜார்ஜ் என்பவரின் வீட்டின் சமையலறையை தகர்த்துள்ளது.
தகர தாள்கள் கீழே விழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வனத்துறையினர் வந்து யானையை விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.