“குட் பேட் அக்லி” படத்தில் அஜித்துடன் இணைந்தது குறித்து x தளத்தில் பதிவிட்ட அர்ஜுன் தாஸ்!!

0
130
Good Bad Ugly Arjun Das joins with Ajith Kumar
Good Bad Ugly Arjun Das joins with Ajith Kumar

நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “குட் பேட் அக்லி” என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள் அது செம வைரலானது. இந்த படம் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Arjun Das posted on x site about working with Ajith in "Good Bad Ugly"!!
Arjun Das posted on x site about working with Ajith in “Good Bad Ugly”!!

இதனால் அஜித்  ரசிகர்கள் எங்களுக்கு இந்த வருடம் தல பொங்கல் என்று சந்தோஷத்தில் உள்ளனர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பு சில மதங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து தற்போது படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

Good Bad Ugly Ajithkumar
Good Bad Ugly Ajithkumar

இந்த படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல், நடிகர் அர்ஜுன்தாஸ்ம் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. அர்ஜுன்தாஸ், அஜித்துடன் இணைந்து  நடித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை X தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நான் இறுதியாக இணைந்து நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் கனவு நனவான தருணம் இதற்கு அஜித் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படத்தில் உங்களின் எதிர்ப்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேன் என நம்புகிறேன். மேலும் அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous articleஇலக்கண பிழையோடு எழுதப்பட்ட பாடலுக்கு வழங்கப்பட்ட தேசிய விருது ..
Next articleமுகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!