இங்கிலாந்து கோட்டைக்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபர் அதிரடி கைது!

Photo of author

By Sakthi

இங்கிலாந்து நாட்டில் நோய்த்தொற்று பரவலால் உண்டாகும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அங்கே நோய் தொற்று பாதிப்புகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது. புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக, நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட இந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது.

உலக நாடுகளுக்கு இடையே தன்னை வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா முடிவு செய்தது, அதற்காக பல தந்திர நடவடிக்கைகளில் அந்த நாடு ஈடுபட்டது.

அந்த நாடு பல்வேறு தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, உள்ளிட்ட பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கடந்து தன்னை வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சியினை முன்னெடுக்க இயலவில்லை.

ஆகவே தன்னுடைய நரி புத்தியை பயன்படுத்திக்கொண்டு இந்த நோய்த்தொற்றை உலக நாடுகள் முழுவதிலும் பரவ செய்து அதன் மூலமாக தன்னை பொருளாதாரத்தில் சக்தி மிக்க நாடாக கட்டமைத்துக் கொள்ள அந்த நாடு முயற்சித்து வருகிறது.

இதற்கிடையே நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கவில்லை. வின்ட்சர் கோட்டையில் மகனும் இளவரசருமான சார்லஸ் மற்றும் மருமகள் கமிராவுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் கோட்டைக்குள் மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயற்சித்தார் என்றும், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி கைது செய்தார்கள் என்றும், அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும், சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.