துருக்கியை அலறவிடும் நோய்த்தொற்று!

0
106

கடந்த 2019ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை கொடுத்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தனர்.

இதற்கு நடுவில் இந்த நோய் தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான், அமெரிக்காவை குறிவைத்து தான் சீனா இவ்வாறு ஒரு நோயை பரப்பியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவை அடுத்து இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

உலக அளவில் நோய் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கின்ற நாடுகளின் பட்டியலில் துருக்கி தற்சமயம் ஆறாவது இடத்தில் இருக்கிறது, இந்த சூழ்நிலையில் துருக்கி நாட்டில் நோய்தொற்று காரணமாக, பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையை 93 லட்சத்தை தாண்டி இருக்கிறது
.

அங்கே நோய்த்தொற்று பரவலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அதோடு நோய்களில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 89.43 லட்சத்தை கடந்திருக்கிறது. அத்துடன் சுமார் 2.81 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், சொல்லப்படுகிறது.