தமிழகத்திற்கு ஆளுநராக என்ட்ரி கொடுக்கும் இராணுவ தளபதி! யார் அவர் ?

Photo of author

By Rupa

தமிழகத்திற்கு ஆளுநராக என்ட்ரி கொடுக்கும் இராணுவ தளபதி! யார் அவர் ?

Rupa

Army commander to enter Tamil Nadu as governor! who is he

தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் தான் ஆர் என் ரவி,  இவர் மீது பல  சர்ச்சைகள் எழுந்து வருகிறது, அரசு ஆவணங்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்றி கூறியது தொடங்கி, சமீபத்தில் இந்தி மாத தொடக்க விழாவில் தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட திருநாடு என்ற சொல்லை விட்டது வரை  இவரது சர்ச்சை  தொடர்ந்து வருகிறது.

இவரது   செயல்பாடுகள் சர்ச்சையாகி வருகின்ற நிலையில் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், ஆளுநர் ஆர் என் ரவிக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய ஆளுநராக வி.கே.சிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.இவர் தமிழகத்தின் ஏராளமாக தேர்தல்களில் மேல்நிலை பொறுப்பில் பணியாற்றியவர்,முன்னாள் மத்திய அமைச்சர் பதவி பொறுப்புகளில் இருந்தவர்.

இவர் இந்திய இராணுவத்தில் இராணுவப் பணியாளர்களின் தலைவராக (COAS) பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இராணுவத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டு  ஓய்வு பெற்றார் .உத்திர பிரதேச காசியாபாத் மக்களவை தொகுதின் உறுப்பினராக 2019 ஆம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்டார் . சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும், விமான போக்குவரத்து, வெளியுறவுத் துறை அமைச்சராகவும்  பதவி வகித்து உள்ளார்.