சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர் தான் முப்படைகளின் தலைவரா?

0
160

சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர் தான் முப்படைகளின் தலைவரா?

மத்திய பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை தக்க வைத்தது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பல மாற்றங்களை செய்து குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் இயற்றியது.

அதற்கு நாடு முழுவதும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்தன. அந்த வகையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

அந்த அறிவிப்பில் விரைவில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தளபதியை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிபின் ராவத்தின், ராணுவ தளபதி பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைந்து ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ள பிபின் ராவத் முப்படை தளபதி ஆக்கப்பட்டுள்ளது எதிர் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
Next articleசென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை