தற்கொலைக்கு இடம் பார்த்த தம்பதிகள்! இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

0
151

தற்கொலைக்கு இடம் பார்த்த
தம்பதிகள்!
இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

வேலூர்: திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கண்ணெதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சடலம் கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது வாலிபருடன் வந்த இளம்பெண் அலறி துடித்தபடி பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் அவர் மயக்கமானார்.

தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீசார், இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அளித்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்(32) என்பதும், அந்த இளம்பெண் அவரது மனைவி புவனேஸ்வரி(27) கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பிரிவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதிதான் திருமணம் நடந்துள்ளது. ‘திருமணத்துக்கு முன்பே மகேஷுக்கு வேறு பெண்களிடம் தொடர்பு இருந்துள்ளது.

இதுதொடர்பாக திருமணமான சில நாட்களிலேயே எங்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அழைத்து சென்றார்.

அங்கு சென்றதும் நான் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தேன். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்தபோது, பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தை திருப்பினார். 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார்.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். உடனே என்னை கீழே தள்ளிவிடப்பார்த்தார். நான் மேம்பாலத்தின் தடுப்பு சுவரை இறுக்கமாக பிடித்து கொண்டேன். இதனால், அவர் மட்டும் குதித்துவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் நானும் அங்கிருந்து குதிக்க முயன்றேன். ஆனால் என்னை தடுத்துவிட்டனர்’ என்று புவனேஸ்வரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleசாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் சொல்றத நம்பமுடியாது!!
Next articleகளைகட்டும் ஆடித்திருவிழா ….. மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!!