‘ஆரோக்ய சேது’ செயலியை ஹேக் செய்த இந்திய இளைஞர் – கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

Photo of author

By Parthipan K

ஆரோக்ய சேது’ செயலியை ஹேக் செய்த இந்திய இளைஞர் – கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக ‘ஆரோக்ய சேது’ என்ற செயலியை அறிமுகம் செய்த மத்திய அரசு, அனைவரும் தங்கள் அலைபேசியில் அதனை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலி மூலம் மக்கள் தங்கள் இருக்கும் இடத்தருகில் கொரோனா தொற்று பாதித்த பகுதி இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கும், கொரோனா தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தலை மீறாமல் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கும் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இனி ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்ய ‘ஆரோக்ய சேது’ அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க இந்த செயலி பாதுகாப்பானதல்ல என்று இரண்டு ஹெக்கர்கள் இதனுள் ஊடுருவி காண்பித்தார்கள். அதற்கு மத்திய அரசு மறுப்பி தெரிவித்து, செயலி பாதுக்கப்பானது தான் என்று பதிலளித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 மணி நேரத்தில் இந்த செயலியை ஹேக் செய்துள்ளார். இந்த செயலியில் கேட்கப்பட்டுள்ள பெயர், வயது, பாலினம், பயண வரலாறு மற்றும் வைரஸ் அறிகுறி சோதனைகள் ஆகியவற்றை நிரப்பாமல் அதற்க்குள் நுழைந்துள்ளார். இந்த செயலி மிகவும் சுமாரான செயலி என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ‘ஆரோக்ய சேது’ செயலியின் நம்பகத்தன்மை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.