மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் கைது !

Photo of author

By Savitha

சேலம் மாவட்டம், சங்ககிரியில் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை சங்ககிரி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு.

சங்ககிரி பகுதிகளில் மருத்து படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சங்ககிரி காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்த்தி, செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் கீதா மற்றும் காவல்துறையினர் சங்ககிரி மற்றும் வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (63), சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியிலும் வைகுந்தம் காளிப்பட்டி பரிவு சாலை பகுதியில் தேவராஜன் (67) ஆகியோர் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது.

தெரியவந்தது உடனடியாக இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்ககிரியில் மருத்துவப் படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.