ஹாரி பாட்டர் படத்தின் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனின் தி பேட்மேன் ட்ரைலர் சும்மா தெறிக்குது!

0
249

உலகெங்கும் பிரபலமான ஹாரிபாட்டர் படத்தில் சிறுவனாக  கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்த ராபர்ட் பாட்டின்சன்தற்போது புதிதாக பேட்ஸ்மேன் அவதாரம் எடுத்து ’தி பேட்மேன்’  என்ற படத்தில் நடித்துள்ளார்.

’தி பேட்மேன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

ராபர்ட் பாட்டின்சன் 2008 ஆம் ஆண்டு வெளியான ட்விலைட் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகனாக பிரபலமானார். அந்தப் படத்தின் ஐந்து பாகங்களும் உலக அளவில் பிரபலமானது. 

’தி பேட்மேன்’ படத்தை இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் ராபர்ட் பாட்டின்சன், ஜோ கிராவிட்ஸ், பால் ஃபிராங்க்ளின் டானோ, ஜெஃப்ரி ரைட்  போன்ற பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர்  தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த  லாக் டவுன் காலகட்டத்தில், வீட்டில் முடங்கி கிடக்கும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous articleநாடக காதலால் பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு தக்க தண்டனை கொடுத்த காதலி
Next articleகிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here