கடினமான வெற்றி இலக்கு காரணமான அர்ஷ்தீப் சிங்! வீசிய பால் எல்லாம் நோ பால்தான்! விளாசி தள்ளிய நெட்டிசன்கள்!
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது டி20 போட்டிகள் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி பூனேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோற்றது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 200 எண்களை கடக்க காரணமாக அர்ஷ்தீப் சிங் இருந்ததாக நெட்டிசன்கள் சரமாரியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இடம் பெறாத அர்ஷ்தீப் சிங் போட்டியில் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் கடைசி கட்ட ஓவரில் சிறப்பாக பந்து வீசும் திறனை பெற்றிருந்தார். இதனால் இந்திய அணியின் டி20 போட்டியில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்வார் என பேசப்பட்டு வந்தார்.
இதனை அடுத்து நேற்றைய டி20 போட்டியில் இரண்டாவது ஓவரில் பந்து வீசு வந்த அவர் ஒரே ஓவரில் மூன்று நோ பால்களை வீசினார். இந்த ஓவரில் 19 ரன்களை வழங்கிய அவர் ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் 2 நோ பால்களை வீசினார். அதில் எடுக்கப்பட்ட ஷனகாவின் விக்கெட்டும் நோ பால் ஆக மாறிப்போனது. இதனால் சனகா கடைசிவரை ஆட்டமில்லாமல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் இரண்டு ஓவரை வீசி 5 நோ பால்கள் 37 ரன்கள் வழங்கினார். இதன் மூலம் இலங்கைஅணி 200 ரன்கள் கடக்க காரணமாக அமைந்தார்.
தோல்விக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா அர்ஷ்தீப் சிங்கை தோல்விக்காக குறை சொல்ல முடியாது ஆனால் நோ பால் வீசுவது குற்றமாகும் எனக் கூறினார்.