நெப்போலியன் அவர்களது திருமணத்தின் பொழுது நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். நெப்போலியன் திரை துறையில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. இவருக்கு நெப்போலியன் என்ற பெயரை முதலில் வைக்கும் பொழுது தனக்கு இந்த பெயர் பிடிக்கவில்லை என்றும் வேறு பெயரை மாற்றி விடலாம் என்றும் நெப்போலியன் பாரதிராஜாவிடம் சண்டை பிடித்திருக்கிறார். எனினும் பாரதிராஜா பிடிவாதமாக இந்த பெயர்தான் நன்றாக இருக்கும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நெப்போலியனை தன் வீட்டில் ஒருவராக பார்த்தது மட்டுமல்லாது தன் இல்லத் திருமணம் என பாரதிராஜா அவர்கள் குறிப்பிட்ட நெப்போலியன் திருமணத்தை நடத்தி இருக்கிறார். அவ்வாறு திருமணம் நடைபெறும் பொழுது மணமக்களை வாழ்த்திய பாரதிராஜா, நெப்போலியனும் சுஜாதாவும் என குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை சுட்டிக்காட்டிய கலைஞர் கருணாநிதி அவர்கள் தன்னுடைய இல்லத் திருமணம் என்று கூறி மணமகளின் பெயரை திருமண வேளையில் பாரதிராஜா மறந்துவிட்டார் போல என்று கூறி, அவர்கள் மீதுள்ள உரிமையின் காரணமாக நான் அதை திருத்தி நெப்போலியன் மற்றும் செல்வி ஜெயசுதா இருவரும் வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் அவருடைய காலகட்டத்தில் பல திரை பிரபலங்களுக்கு திருமணம் செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் நெப்போலியன் அவர்களின் திருமணத்திற்கு சென்ற பொழுது பாரதிராஜா அவர்களின் தவறை மறைமுகமாக சுட்டி காட்டி அவருடைய தவறை தான் உரிமையுடன் திருத்துவதாக தெரிவித்திருக்கிறார்.