யூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி!

0
158

எருமசாணி என்ற யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களிடையே இந்த சேனல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. எருமசாணி விஜய் மற்றும் ஹரிதா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எருமசாணி விஜய் ஒருசில படங்களில் சமீப காலமாக நடித்து வந்த நிலையில் தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். முதல் முறையாக எருமசாணி விஜய் இயக்கும் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் ஒரு கல்லூரி மாணவ மாணவிகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் சமீபத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் பாதிப்பு தான் இந்த கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடிக்கிறார். இந்த படத்தின் கதை அவரை மிகவும் கவர்ந்ததால் உடனடியாக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க விருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Previous articleகட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்து பணம் தராததால் வாழைத்தாரை தூக்கிச் சென்ற திமுகவினர்! மதுரையில் ருசிகரம்!!
Next articleபெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!