அருந்ததி பெரியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டியலினத்தவர்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்
ஆதிக்க ஜாதி வெறியோடு உயர் ஜாதி சிந்தனை கொண்ட தலித் சமூதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அருந்ததிய சமுதாயத்தை சேரந்த முதியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார் என ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் நேற்று (05.01.2020) அருந்ததிய முதியவர் வெற்று நிலத்தில் மாடு மேய்த்து கொண்டு இருந்தார், அங்கு வந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அருந்ததி சமுதாய பெயரை இழிவாக பேசி இங்கு என்னடா மாடு மேய்கின்றாய் என்று ஆபாசமாக பேசியுள்ளார்,.
உடனே, முதியவர் என்ன அய்யா பொது இடத்தில் அதுவும் அருந்ததிய மக்களின் எங்கள் நிலத்தில் தானே மேய்க்கின்றேன் என்று கூறி உள்ளார்,. அருந்ததி சமுதாய பெயரை இழிவாக கொண்டு வேசி மகனே என்னிடம் சட்டம் பேசுகிறாயா? என்று கன்னத்தில் அறைந்து உள்ளார், அய்யா என்னால் தாங்க முடியல சாமி அடிக்காதிங்க என்று காலில் விழுந்து கெஞ்சி கேட்டுள்ளார்,
ஆணவ ஜாதிவெறி கொண்ட வழக்கறிஞர் விஜயகுமார் செங்கல் கொண்டு முதுகிலும் மார்பிலும் முகத்திலும் கொலைவெறியோடு தாக்கி உள்ளார்,. தொண்டை மீது காலால் மிதித்து அருந்ததி பெயரை கொண்ட இழிவாக, பசங்களா ஊருக்கு உள்ள வாழவே முடியாது என்று கூறி தாக்கி உள்ளார்,.
பக்கத்தில் இருந்த உறவினர்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்சில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்,.
திருவெண்ணைநல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதித்தமிழர் பேரவை பிரமுகர் வெங்கடேசன் அதியன் என்பவர் குற்றம் சாட்டி உள்ளார்.