அருவி படத்தின் நடிகையின் அடுத்த திரைப்படம்… கவனம் ஈர்க்கும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரல்…

0
38

அருவி படத்தின் நடிகையின் அடுத்த திரைப்படம்… கவனம் ஈர்க்கும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரல்…

 

 

அருவி படம் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை அதிதி பாலன் அடுத்து நடித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி கவனம் பெற்று வருகின்றது.

 

அருவி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அதிதி பாலன் அவர்கள் அறிமுகமானார். நடிகை அதிதி பாலன்.அவர்கள் அருவி திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதாவது நடிகை திரிஷா அவர்களின் மாணவியாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருப்பார்.

 

அருவி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் சில படங்களாலும் மலையாளம் மொழியில் சில படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்தார். பின்னர்

தற்பொழுது கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் அவர்கள் நடித்துள்ளார்.

 

கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ்  கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

 

கருமேகங்கள் கலைகின்றன திரேப்படத்தில் இயக்குநர் பாரதி ராஜா, நடிகர் சந்திரசேகர், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

தந்தையர் தினத்தை முன்னிட்டு கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியானது. இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்14) கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகிய நிலையில் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது.