கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அருவி பட நாயகி!!! 

0
35
#image_title
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அருவி பட நாயகி!!!
நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் அருவி திரைப்படத்தில் நடித்த நடிகை அதிதி பாலன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
வாத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர்கள் சந்தீப் கிஷன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஸ், ஜான் கோக்கன், ஆங்கில நடிகர் எட்வர்ட் சொன்னென்பிலிக், நாசர், விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் கேப்டன். மில்லர் திரைப்படம் குறித்த முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தமிழில் அருவி திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான நடிகை அதிதி பாலன். அவர்கள் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய காப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழில் அருவி திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகை அதிதி பாலன் அவர்கள் மலையாளத்தில் நடிகர் நிதின் பாலி அவர்களுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு சமீபத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வெளியான கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.