அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் ஆர்யா!! வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி உள்ளார்!!

0
93
Arya to be busy in next films !! Committed to a web series !!
Arya to be busy in next films !! Committed to a web series !!

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் ஆர்யா!! வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகி உள்ளார்!!

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருப்பவர் ஆர்யா. இவர் 2011 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஓரம்போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்ற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.

ஆர்யா 2013 ஆம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படத்தில் ஷாம், அசின், பூஜா நடித்துள்ளனர் இந்த திரைப்படம் சிறு பிரச்சினை காரணமாக 2005 ஆம் ஆண்டு வெளியான. இந்த திரைப்படம் வருவதற்கு முன்பே விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ஆர்யாவின் திரைக்கு வந்த முதல் திரைப்படமாக இருந்தது. இதை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார். இதை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடிகை ஆயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில் அண்மையில் இவர் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் பா ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இந்த திரைப்படத்திற்கு மிக சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடையே பெரும் அளவில் ஆதரவு அளித்திருந்தது. மேலும் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் எனிமி என்ற திரைப்படம் தற்போது வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விஷாலும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. மேலும் இந்த வெப்சீரிஸ் அமேசான் தளத்தில் தான் வெளியாகும் எனவும் தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிசியாக அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவரின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் பெருமளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk