நாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் மூலமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.முன்னதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.அவர் நாட்டை விட்டு வெளியேறியது ஆப்கான் மக்களை அதிர்ச்சியுறச் செய்தது.
அவர் ஆப்கன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.ஆனால் அவருக்கு அந்த நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனிடைய்ர் அவர் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார்.மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தங்கள் நாட்டில் நுழைவதற்கு அனுமதி அளித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆப்கான் அதிபர் பெரிய மதிப்பிலான பணத்தை தன்னுடன் ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.இதனிடையே அவர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் தனது நிலைப்பாட்டை முதல் முறையாக காணொளி மூலம் தெரிவித்தார்.நேற்றைய தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி மூலம் பேசிய அவர் கூறியதாவது,
தாலிபான்களால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கவே தான் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் மேலும் தான் ஆப்கானிஸ்தானில் இருந்திருந்தால் பெரிய வன்முறை நிகழ்ந்திருக்கும் எனவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் போராடிய ஆப்கானிஸ்தான் படைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.மேலும் தான் காலணியை அணியக்கூட நேரம் இல்லாமல் தவித்ததாகவும் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னதாகவும் கூறினார்.
விரைவில் ஆப்கன் நாட்டிற்கு திரும்பப் போவதாகவும் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடன் சேர்ந்து அரசை அமைக்கப் போவதாகவும் அஷ்ரப் கனி கூறினார்.