அஷ்ட ஐஸ்வர்யமும் பெருக.. தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தீபாவளி நாளில் செய்ய வேண்டிய வழிபாடு!!

Photo of author

By Gayathri

இன்று நாடே தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறது.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து எண்ணெய் குளியல் போட்டால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும்.புத்தாடை உடுத்தி இனிப்பு பலகாரங்களை ருசித்து பட்டாசு வெடிக்கப்படுகிறது.

அதேபோல் இந்நாளில் பூஜை வாழிபாடு செய்வதால் வாழ்வில் ஏகப்பட்ட நன்மைகளை பெற முடியும் என்பது ஐதீகம்.தீபாவளி நாளில் அதிகாலை நேரத்தில் பூஜை செய்ய இயலாதவர்கள் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை பூஜை செய்து வழிபடலாம்.

இந்நாளில் லட்சுமி குபேர பூஜை பிரபலமான ஒன்று.இந்நாளில் மாலை 6 மணி டூ 8 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.இதனால் பணக் கஷ்டம் நீங்கி தன வரவு அதிகரிக்கும்.வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் ஒழிந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.இந்நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெருகி நன்மைகள் பல உண்டாகும்.

சுமங்கலி பெண்கள் இந்நாளில் கேதார கௌரி விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.லட்சுமி பூஜை செய்தால் வாழ்வில் இருள்,பொறாமை,துரோகம்,துக்கம் அனைத்தும் நீங்கிவிடும்.ஐப்பசி மாத அமாவாசை நாளில் கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை செய்து வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.வீட்டில் உள்ள அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

தூய்மையான இடத்தில் தான் லட்சுமி வாசம் புரிவார்.இதனால் வீட்டை சுத்தம் செய்து பூஜை பொருட்களை துலக்க வேண்டும்.பிறகு வீட்டில் பசு மாட்டு கோமியம் தெளித்து மலர்களை கொண்டு வீட்டை அலங்கரிக்க வேண்டும்.அதன் பிறகு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்து வழிபட வேண்டும்.இந்த தீபாவளி நாளில் பூஜை செய்வதால் ஏகப்பட்ட பலன்களை அடையமுடியும்.