சர்ப்ராஸ் கான் மீது கடிந்து கொண்ட அஸ்வின்!! களத்தில் நடந்தது என்ன??

Photo of author

By Vijay

Cricket: இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சர்ப்ராஸ் கானை கடிந்து கொண்ட அஸ்வின்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் தோற்றதால் முதலில் இந்திய அணி பந்து வீச வேண்டிய சூழல் உருவானது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியின் வீரர்கள் மீது எந்தவித தாக்கத்தையும்  ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அதிக ஓவர்கள் வீசிய அஸ்வின் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Ashwin scolds Sarpras Khan
Ashwin scolds Sarpras Khan

இதில் இரண்டாவது விக்கெட்டில் வில் யங் சிக்கினார். ஆனால் இந்த விக்கெட்டில் அஸ்வின் வீசிய பந்து கிளவ்சில் உரசியது. ஆனால் நடுவர் அவுட் தர மறுத்தார். இதனால் அஸ்வின் ரிவியு கேப்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா உடன் ஆலோசனையில் ஈடுபட்டார், கீப்பர் ரிஷப் பண்ட் எனக்கு ஏதும் சத்தம் கேக்க வில்லை என்று கூறினார்.

அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில் லெக் திசையில் பேட்ஸ்மேன் அருகில் பீல்டிங் நின்ற சர்ப்ராஸ் கான் எனக்கு சத்தம் கேட்டது ரிவ்யு எடுக்க வலியுறுத்தினார். இது வெற்றிகரமாகவும் இருந்தது. ஒரு சில ஓவர்களுக்கு பின் அதே குழப்பம் ஏற்பட்டது.

மீண்டும் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் பண்ட் ஆகியோர் குழப்பத்தில் விவாதித்து கொண்டிருந்த நிலையில் அங்கு கருத்தை தெரிவிக்க வந்த சர்ப்ராஸ் கானை விலகி நிற்குமாறு சைகை செய்தார்  இவ்வாறு இவர் செய்தது சரியா இல்லை போட்டி சூழ்நிலை காரணமாக இவ்வாறு நடந்து கொண்டார? என விவாதித்து வருகின்றனர்.