இந்த பாகிஸ்தான் வீரர் மட்டும் ஐபிஎல் ஏலத்துல இருந்தா… அஸ்வின் சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யுடியூப் சேனலில் ஷாகின் அப்ரிடி குறித்து பேசியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இல்லாதது பாபர் அசாம் மற்றும் அவரது அணிக்கு பெரும் பின்னடைவு என்று கூறினார். அஃப்ரிடி ஐபிஎல் ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்தால் என்ன ஆகும் என்பது குறித்து தான் நினைத்துப் பார்த்ததாகவும் ’அப்ரிடியின் திறமை லீக்கில் பெரிய ஒப்பந்தத்தைப் பெற உதவியிருக்கும்’ என்று அஸ்வின் கூறினார். அவர் 14 கோடிக்கும் மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் “கடந்த முறை (உலகக்கோப்பையில்) நாங்கள் பாகிஸ்தானை எதிர்கொண்டபோது ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் நன்றாகப் பந்துவீசினர், ஆனால் ஷாஹீன் அப்ரிடியின் மூன்று விக்கெட்கள்தான் ஆட்டத்தை உடைத்தது. இப்படிபட்ட நிலையில் அவரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு” எனக் கூறியுள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முக்கிய பங்கு வகித்தார், ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை முதல் மூன்று ஓவர்களில் வெளியேற்றினார், பின்னர் கேப்டன் விராட் கோலியை வெளியேற்றினார்.