டிராவிட்டுக்கு பதில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற முன்னாள் இந்திய வீரர்!

Photo of author

By Vinoth

டிராவிட்டுக்கு பதில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற முன்னாள் இந்திய வீரர்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் வழிகாட்டுதலில் இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை வென்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி 20 உலகக்கோப்பையை வெல்வதே தற்போது இந்திய அணியின் இலக்காக இருக்கும். அதற்கு டிராவிட்டின் வழிகாட்டுதல் பெரும் துணையாக இருக்கும்.

இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளார். அதையடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி வி எஸ் லஷ்மன் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஆசியக் கோப்பை தொடரில் மட்டும் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார். ஏற்கனவே அவர் இலங்கை சென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் சில அணிகளுக்கு ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. நாளை முதல் தொடர் தொடங்க உள்ளது.