பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரசாரம் செய்வாரா? நீங்கள் அவர்களை சந்திக்கும் போது இந்த கேள்வியை எழுப்புங்கள் நான் அவருடைய சார்பாக எதுவும் பேசமாட்டேன், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் பத்திரிக்கையாளர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் என தெரிவித்திருக்கிறார்.
மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டரீதியாக தவறு என்பதால் அண்ணாமலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நைனார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றவர் அதோடு அவர் என்னுடைய நண்பரும் கூட, அவர் தெரிவித்த கருத்தில் தவறு ஏதுமில்லை. அவர் தெரிவித்த வார்த்தை தேவையில்லாத வார்த்தைகள் அவர் எவ்வாறு உரையாற்றினார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வார்த்தைகளில் தவறு இருக்கிறது அதை தவிர கருத்து சரிதான் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.
மேலும் பேசிய அவர், கருத்து வேறு வார்த்தை, வேறு, அவ்வாறு தெரிவிக்க கூடாது அரசியல் என்ற பாதையில் அவர்கள் தைரியமாக எதையும் செய்யவில்லை என தெரிவித்திருக்க வேண்டும். அவர்களுக்கு தைரியமில்லை அவர்கள் சொல்லியிருக்க வேண்டும்.
அவர்கள் எவ்வாறு தைரியமாக இருக்கிறார்கள்? அவர்களிடம் ஆட்சி பொறுப்பில் இருந்த போது தைரியமாக இருந்தார்கள் அவர்களுடைய மடியில் கனம் இருக்கின்றது. என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம் என கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.
சிறு குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும் இதன் காரணமாக, அவர்கள் தைரியமாக இருக்க மாட்டார்கள் என்று நன்றாக தெரியும். தைரியமாக உரையாற்றவில்லை என்ற வார்த்தையை மாற்றி தெரிவித்திருக்கிறார். நான் அவர் தெரிவித்த வார்த்தைகளை போல எப்பொழுதும் பயன்படுத்த மாட்டேன் என கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.