மேற்கு வங்கத்தில் தொடங்கியது முதல்கட்ட வாக்கு பதிவு!

Photo of author

By Sakthi

கடந்த பெப்ரவரி மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம்; ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் அதன்படி தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.அது போல வரும் ஆறாம் தேதி புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி கடந்த 19ஆம் தேதி வரையில் நடைபெற்றது.

தமிழகத்தைப் பொருத்தவரையில், தேர்தல் வேலைகள் தேர்தல் ஆணையம் சார்பாகவும் அரசியல் கட்சிகள் சார்பாகவும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அதேபோல அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில், மார்ச் மாதம் 27ஆம் தேதி ஆன இன்றைய தினம் மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் எட்டு கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவானது இன்றையதினம் தொடர்ந்து வருகின்றது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களைச் சார்ந்த 30 சட்டசபைத் தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தொற்று கால வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொற்றுக்கால நெறிமுறைகளை கடைபிடிப்பதில் உண்டாகும் நேர இழப்பை ஈடு செய்வதற்காக வழக்கமாக மாலை 6 மணி மழையில் நடக்கும் வாக்குப்பதிவு அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டு 6:30 வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த வாக்குப்பதிவு மாலை ஆறு முப்பது மணி வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.