ஆளுநரை நேரில் சந்தித்த சபாநாயகர்!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபை வரும் 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது இந்த சட்டசபை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். இதனையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய அப்பாவு தெரிவித்ததாவது’

16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பதுதான் மரபு என்று தெரிவித்த அவர் அதன்படியே ஆளுநரை சபாநாயகர் ஆகிய நான் நேரில் சந்தித்து சட்டப்பேரவைக்கு வருகை தருமாறு அழைத்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் வருகை தருவதாக தெரிவித்து இருக்கின்றார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கிறார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பரிசீலனை முடிவடைந்த பின்னர் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவையில் சிறப்பாக நடைபெறும் அலுவல் குழுவுடன் ஆலோசனை செய்த பின்னர் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருக்கின்றார் சபாநாயகர்.

அதேபோல வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், அதிமுக சார்பாக சென்ற 14ஆம் தேதி நடைபெற்ற அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதோடு சட்டப்பேரவை கொறடா மற்றும் துணைகொறடா, பொருளாளர், செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.