எடுக்கப்பட்ட புதிய சர்வே கூட்டணி வியூகத்தை மாற்றி அமைக்க திட்டமிடும் திமுக! திமுகவின் கனவு பலிக்குமா!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் அதிமுகவின் வளர்ச்சியையும், பொதுமக்களிடம் அந்த கட்சிக்கு இருக்கும் நற்பெயரையும், பார்த்து திமுக ஆடிப்போய் இருக்கிறது என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

தமிழக மக்களிடையே ஆளும் கட்சியான அதிமுக அவருக்கு பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லை என்று ஒரு சர்வே சொல்கிறது. எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தமிழக மக்களிடையே அவருடைய மரியாதை உயர்ந்து கொண்டே வருவதாக சொல்கிறார்கள்.

இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து திமுக தன்னுடைய கூட்டணியை மாற்றி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் காங்கிரஸ், போன்ற கட்சிகளை கூட்டணியில் இருந்து விலக்கி விட்டு அதற்கு பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளை தங்களுடைய கூட்டணியில் இணைப்பதற்கு திமுகவின் தலைமை முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

அதற்கு அச்சாரமாக தான் முன்கூட்டியே புதுச்சேரியில் திமுகவிற்கும், காங்கிரஸிற்கும், உயர்ந்து வரும் பிரச்சனையை பெரிதாக்கி அங்கே திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அவர்களை திமுக தலைமை அறிவித்து இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பிரச்சினையை அப்படியே தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆளும் தரப்பான அதிமுக மீது மக்களிடம் பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லை என்பதை தெரிந்துகொண்ட திமுக தற்பொழுது தன்னுடைய கூட்டணி வியூகத்தை மொத்தமாக மாற்றி அமைப்பதற்காக திட்டமிட்டு கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதன் முதல் கட்டமாக தான் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி தொகுதியில் தவிர வேறு எந்த தொகுதியிலும் பெரிதாக திமுகவிற்கு பலம் சேர்க்க வாய்ப்பில்லை. அதனாலேயே முதலில் அந்த கட்சியை கழற்றி விட்டு விட்டு அதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழட்டிவிட திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியை தங்களுடைய கூட்டணியில் இணைத்து விடலாம் என்பதே அந்தக் கட்சியின் எதிர்பார்ப்பாக இருந்து வருவதாக சொல்கிறார்கள்.

ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சனையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஆளும் தரப்பு இருக்கும் ஒரு சிறிய வருத்தம் இருந்து வருகிறது. அதனை எதிர்க்கட்சியான அதிமுக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதாக சொல்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலம் வன்னியர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்பதே திமுகவின் கணக்காக இருப்பதாக சொல்கிறார்கள்.

திமுகவின் இந்த கூட்டணி கணக்கு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஆளும் தரப்பு இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் சிறு சிறு வருத்தம் இருக்கின்றதே ஒழிய கூட்டணியை விட்டு முழுமையாக வெளியேறும் எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.

கூட்டணி வியூகத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுமார் 6 சதவீத வாக்குகளை தன்வசம் வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து இழப்பதற்கு நிச்சயமாக விரும்ப மாட்டார். அதனால் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் தொடர்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்வார் என்று சொல்கிறார்கள் அவருடைய அபிமானிகள்.

ஏற்கனவே அமைச்சர்கள் தங்கமணி ,வேலுமணி , போன்றோர் டாக்டர் ராமதாசை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில் கூட மருத்துவர் ராமதாஸ் கூட்டணி உடையும் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆகவே திமுகவின் ஆசை நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை சிலர் நுழைக்க பார்ப்பதாக தெரிவித்து வருகின்றார். இதன்மூலம் அவர் தான் எங்கே தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.